பினராயி விஜயனுக்கு எதிராக திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்! – காங்கிரஸ் அறிவிப்பு

பினராயி விஜயனுக்கு எதிராக திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்! – காங்கிரஸ் அறிவிப்பு

கேரள அரசுக்கு எதிராக வருகிற திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயனுக்கு எதிராக திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்! – காங்கிரஸ் அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதால் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பினராயி விஜயனுக்கு எதிராக திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்! – காங்கிரஸ் அறிவிப்பு

இது தொடர்பான நோட்டீசை கேரள காங்கிரஸ் வழங்கியிருந்தது. இதன் படி வருகிற திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயனுக்கு எதிராக திங்கட்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம்! – காங்கிரஸ் அறிவிப்பு

வழக்கமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டு மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவை ஒரே ஒரு நாள் கூட்டப்படுவதால் ஐந்து மணி நேரம் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆளுங்கட்சி பலமாக இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஐந்து மணி நேரம் அதிகம் என்று ஆளுங்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.