கேரளா செல்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை.. சில விதிமுறைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்வு!

கேரளா செல்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை.. சில விதிமுறைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்வு!

முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா அதிகமாக பரவிய நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து 2,407 மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவுக்கு தொழில்முறையாக வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது தொழில்முறை, மருத்துவம், நீதிமன்ற வழக்குகள், சொத்துக்கள் தொடர்பாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் 7 நாட்கள் வரை தங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கேரளா செல்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை.. சில விதிமுறைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்வு!

அதே போல தேர்வு மற்றும் கல்வி தொடர்பாக கேரளாவுக்கு வரும் மாணவர்கள் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னரும் தேர்வு முடிந்து 3 நாட்கள் வரையிலும் தங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் பயணிகளுக்கு தனிமைபடுத்துதல் இல்லையே தவிர, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவுக்கு வரும் பயணிகள் கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில் பதிவு செய்து விட்டு கேரளவிற்குள் வர வேண்டும் என்றும் அந்த போர்ட்டலில் வந்த காரணம், செல்லும் இடம், சந்திக்கும் நபர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுக்க என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா செல்பவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை.. சில விதிமுறைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்வு!

அதனைத்தொடர்ந்து கேரளாவுக்கு வருபவர்கள் வேறு எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவேண்டிய இடத்துக்கு போக வேண்டும் என்றும் 7 நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது என்றும் பார்க்க வந்தவர்களை தவிர வேறு யாருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் 1056 என்ற எண்ணில் ஹெல்ப்லைனை அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே செல்ல கூடாது என்றும் மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.