“திமுகவுடன் கூட்டணி இல்லை; ரஜினியிடம் ஆதரவு கேட்க மாட்டேன்” – சரத்குமார்

 

“திமுகவுடன் கூட்டணி இல்லை; ரஜினியிடம் ஆதரவு கேட்க மாட்டேன்” – சரத்குமார்

அரசியலுக்கு வரவில்லை எனக்கூறிய ரஜினிகாந்திடம் ஆதரவு கோரப்போவதில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

“திமுகவுடன் கூட்டணி இல்லை; ரஜினியிடம் ஆதரவு கேட்க மாட்டேன்” – சரத்குமார்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில் உள்ளதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். அதன்படி ஏற்கனவே த.மா. கா கட்சி அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக தெரிவித்தது.

“திமுகவுடன் கூட்டணி இல்லை; ரஜினியிடம் ஆதரவு கேட்க மாட்டேன்” – சரத்குமார்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், “சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை போல சில கட்சிகள், கட்சி கொடிகள், கரை வேட்டி வைத்திருந்ததால் புதிய கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதிமுக கூட்டணி தொடரும். முதல்வர் பேச அழைக்கும் போது எங்கள் கோரிக்கையை முன்வைப்போம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும். அரசியலுக்கு வரவில்லை எனக்கூறிய ரஜினிகாந்திடம் ஆதரவு கோரப்போவதில்லை” என்றார்.