ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என பரவிய செய்தி வதந்தி: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என பரவிய செய்தி வதந்தி: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என பரவிய செய்தி வதந்தி: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று இன்று காலை செய்திகள் வெளியாகின. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு முடிந்த உடன் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.