தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

புதுச்சேரி அருகே 600கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கிறது. தீவிர புயல் கரையை கடக்கும்போது 89 முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தீவிர புயலாக மாறும் ‘நிவர்’ : சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

புயல் சின்னத்தால் கொந்தளிப்பாக வங்கக்கடல் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர்,நாகை, பாம்பன் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நெருங்குவதால் தனுஷ் கோடி தொடங்கி மரக்காணம் வரை கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.