நிவர் புயல் : எந்தெந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்?

நிவர் புயல் : எந்தெந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்?

நிவர் புயல் கடலூருக்கு 300 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 310 கிலோ மீட்டர், சென்னைக்கு 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் : எந்தெந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்?

அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் : எந்தெந்த மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்?

இதனிடையே சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புரசைவாக்கம் 15செமீ, சோழிங்கநல்லூர் 14.5செமீ, கிண்டி 14.3 செமீ, மயிலாப்பூர் 14 செமீ, மாம்பலம் 13.6 செமீ, ஆலந்தூரில் 11.9செமீ மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும். 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையை கடக்கும்; இதன் காரணமாக புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும்