“உலுக்கி எடுத்த நிவர் புயல்” – உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் இதோ!

 

“உலுக்கி எடுத்த நிவர் புயல்” – உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் இதோ!

நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று இரவு 11 மணிக்கு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், பல இடங்களில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. புயலால் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் தேங்கி, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மரங்கள் சாய்ந்ததால் சென்னை உட்பட பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு முன்கூட்டியே துண்டிக்கப்பட்ட நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

“உலுக்கி எடுத்த நிவர் புயல்” – உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் இதோ!

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ்சும், திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அத்தியாவசிய தேவைகளை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விவரங்கள் வெளியாகியுள்ளது.

“உலுக்கி எடுத்த நிவர் புயல்” – உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் இதோ!

அவை கீழ்கண்டவாறு: மனித உயிரிழப்பு 3, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3, சேதமடைந்த வீடுகள் 101, கால்நடைகள் உயிரிழப்பு 26, சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை 380, மீட்பு முகாம்களின் எண்ணிக்கை 3,085, தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 2, 27, 317, சாய்ந்த மின்கம்பங்கள் 19, நிரந்தர மருத்துவ முகாம்கள் 921, நடமாடும் மருத்துவக் குழுக்கள் 234, மருத்துவ பயன் பெற்றோர்களின் எண்ணிக்கை 73,491.