விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவாங்க… நிதிஷ் குமாரின் எஸ்கேப் பதில்

 

விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவாங்க… நிதிஷ் குமாரின் எஸ்கேப் பதில்

எரிபொருள் விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவாங்க என்று செய்தியாளரின் கேள்விக்கு நிதிஷ் குமார் பதிலளித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்டார். அதற்கு நிதிஷ் குமார் நைசாக பதில் அளித்து எஸ்கேப் ஆனார். நிதிஷ் குமாரின் பதிலானது இந்த கேள்விக்கு இது பதில் இல்லை என்பது போல் இருந்தது.

விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவாங்க… நிதிஷ் குமாரின் எஸ்கேப் பதில்
நிதிஷ் குமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக நிதிஷ் குமார் பதிலளிக்கையில், (பெட்ரோல், டீசல்)விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் தற்போது விலை உயர்ந்து வருகிறது. அதனை எல்லோரும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார். பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக நிதிஷ் குமார் வெளிப்படையாக எந்தவித கருத்தையும் சொல்லாமல் கழுவுற மீனில் நழுவற மீனாக பதில் அளித்தார்.

விலை உயரவில்லையென்றால் எல்லோரும் விரும்புவாங்க… நிதிஷ் குமாரின் எஸ்கேப் பதில்
பா.ஜ.க.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு சங்கலித்தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் சரக்கு வாகனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தும். அதன் விளைவாக பொருட்களின் விலை உயரும். இதன் தொடர்ச்சியாக சாமானிய மக்களின் அன்றாட் பட்ஜெட் அதிகரிக்கும். இதன் விளைவாக ஏற்படும் பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் நடுத்தர வர்த்தகத்தினர் படாதபாடுபடுவர்.