Home இந்தியா பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும்.. எச்சரிக்கும் நிதி ஆயோக் உறுப்பினர்.. கட்டுப்பாடுகளை தளர்த்தும் மாநிலங்கள்

பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும்.. எச்சரிக்கும் நிதி ஆயோக் உறுப்பினர்.. கட்டுப்பாடுகளை தளர்த்தும் மாநிலங்கள்

பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் எச்சரிக்கும் அதேவேளையில், மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கி உள்ளன.

நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் இது குறித்து கூறுகையில், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை என்றால், அடுத்த மாதம் தொடங்கும் பண்டிகை காலத்தில் கூட்டம் காரணமாக நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுதான் வைரசுக்கு எதிரான நமது சிறந்த பாதுகாப்பு முறையாகும் என எச்சரிக்கை செய்தார்.

வி.கே.பால்

இந்த சூழ்நிலையில், தற்போது ஒவ்வொரு மாநிலங்களும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கும் நிலைக்கு வந்து விட்டன. தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு (11, 12ம் வகுப்பு) பெற்றோர்களின் ஒப்புதலுடன் மாணவர்கள் செல்ல அனுமதி அளித்துள்ளது. மேற்கு வங்க அரசு திரையரங்குகள், ஜாத்ரா உள்பட சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் பல மாநிலங்கள் வரும் நாட்களில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகள்

மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் மக்கள் அதிகளவில் வெளியே வருவார்கள். மக்கள் அதிகளவில் வெளியிடங்களில் கூட தொடங்கினால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. கொரோனா வைரசுக்கான மருந்து இன்னும் பரிசோதனை கட்டத்தை தாண்டாத நிலையில், மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விலக்குவது கவலை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், வீட்டை வெளியே சென்றால் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவிலிருந்து நாம் நம்மை காத்து கொள்ளலாம்

மாவட்ட செய்திகள்

Most Popular

ஊட்டி- அரசு சத்துணவு கூடங்களுக்கு தீயணைப்பு கருவிகள் வழங்கிய ஆட்சியர்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 12 அரசு சத்துணவு மையங்களுக்கு தீ அணைக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று வழங்கினார். இதன்படி, நஞ்சநாடு,...

“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல்...

திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல் மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட்...

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அருகே மது போதையில் ஒரு இளைஞரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி...
Do NOT follow this link or you will be banned from the site!