‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்’ – திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

 

‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்’ – திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் என்னும் திருக்குறளை உதாரணம் காட்டி பேசினார்.

2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், டிஜிட்டல் முறையில் மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை டிஜிட்டல் முறையில் செய்ய 3,768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புகள் திட்டங்கள் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும். சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்காக 15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்’ – திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும். 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். 15,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும். பொருளாதார நடவடிக்கையாக சென்னை உட்பட ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும். மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ரூபாய் 1,500 கோடியில் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 9.50 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதராமன், சந்தைகளில் இருந்து பல லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில், ‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு என்பதே இந்த குறளின் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.