பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு மோடி குறை வைக்கல- நிர்மலா சீதாராமன்

 

பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு மோடி குறை வைக்கல- நிர்மலா சீதாராமன்

தமிழகம் வளர்ச்சியடைந்த மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயா நகரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என சிலர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். தேசிய மின்னணு விவசாய பொருட்கள் விற்பனை முறை தமிழகத்தில் அமலுக்கு வரும்

பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு மோடி குறை வைக்கல- நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் செயலாற்றி வருபவர் தான் பிரதமர் மோடி. 2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான். தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். வேல் யாத்திரையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கே செல்லாதவர்கள் கூட தற்போது கோயிலுக்கு செல்கின்றனர். அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து ஒரு பயம் வந்துவிட்டது. இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்டவர் பிரதமர். நாங்கள் தமிழகத்தை வளர்ச்சியடைய வைத்துக்கொண்டிருக்கிறோம். இடையூறு அரசியல் செய்யவில்லை” எனக் கூறினார்.