‘மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு அதிகரிப்பு’: நிர்மலா சீதாராமன் உரை!

 

‘மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு அதிகரிப்பு’: நிர்மலா சீதாராமன் உரை!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் படி, முதல்முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

‘மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு அதிகரிப்பு’: நிர்மலா சீதாராமன் உரை!

நிர்மலா சீதாராமன் உரை:

மருத்துவ துறைக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற அளவில் புதிய மருத்து சேவைத் திட்டங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளது. மாநில அளவிலும் புதிய மருத்துவ கல்வி நிறுவனங்கள் தொடங்க அரசு திட்டம். 17 புதிய பொது சுகாதார கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசர கால மருத்துவத்தில் முன்னேறியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பட்ஜெட் இதுவரை இல்லாத வகையில் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும்.

100 கோடிக்கும் அதிகமாக மக்கள் கொண்ட நாட்டில், கொரோனா தொற்று குறைவாக உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட் களுக்கு சமமானது.

சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூ.27 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் ஆகியவற்றை அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கும்

500 அம்ருத் சிட்டி உருவாக்கத் திட்டம் – ரூ.2 லட்சத்து 80 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்.