நிதி பற்றாக்குறையா? மாநில அரசுகளே ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொங்க: நிர்மலா சீதாராமன்

நிதி பற்றாக்குறையா? மாநில அரசுகளே ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொங்க: நிர்மலா சீதாராமன்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மாநில அரசுகளுக்கு கடும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது.

நிதி பற்றாக்குறையா? மாநில அரசுகளே ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக்கொங்க: நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் 41-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்மலா சீதாராமன், “நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம். மாநில அரசுகளுக்கு உதவும்படி ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.1.50 லட்சம் கோடியாக கணக்கீடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.3 லட்சம் கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டியிருக்கும்” என தெரிவித்தார்.