கூடலூர் வாக்குச்சாடி மையத்தில் நீலகிரி ஆட்சியர் ஆய்வு!

 

கூடலூர் வாக்குச்சாடி மையத்தில் நீலகிரி ஆட்சியர் ஆய்வு!

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் படி, கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

கூடலூர் வாக்குச்சாடி மையத்தில் நீலகிரி ஆட்சியர் ஆய்வு!

அப்போது, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் உப்பட்டி பகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட்டார்.

அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது, கூடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.