உதகை உழவர் சந்தையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு!

 

உதகை உழவர் சந்தையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு!

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட்டை இடமாற்றம் செய்து குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை தொடர்ந்து, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் கடைகள், மார்கெட்டுகள் செயல்பட அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, நீலகிரி மாவட்டம் உதகை உழவர் சந்தையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா? என்று நேற்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

உதகை உழவர் சந்தையில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு!

அப்போது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பகல் 12 மணிக்கு மேல் வெளியே வருவதை தவிர்க்க அறிவுறுத்திய ஆட்சியர், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகை மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்து வருவதால் சுழற்சி முறையில் கடைகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அதேபோல், மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி., பாண்டியராஜன், உதகை உதவி ஆட்சியர் மோனிகா ராணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.