அடுத்த மாதம், முதல் வாரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்?

 

அடுத்த மாதம், முதல் வாரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்?

கொரோனா பீதி ஓரளவிற்கு குறைந்து, தற்போது மக்கள் வெளியே நடமாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

போக்குவரத்தைப் பொறுத்தவரை இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்திற்கும் வெளியூர் சென்று வர அனுமதி தரப்பட்டன பின்னர் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தற்போது பேருந்துகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகின்றன.

அடுத்த மாதம், முதல் வாரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்?

ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அரசுக்கு சுமார் ரூ. 100 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

அடுத்த மாதம், முதல் வாரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்?

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியாகிறது. இதனையடுத்து ஆம்னி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக உரிமையாளர்கள் அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இதன் பின்னர் அக்டோபர் முதல் வாரத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-போஸ்