அரியலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு…!

 

அரியலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு…!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால் நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு செய்ய அம்மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு…!

இந்நிலையில் அரியலூர் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரியலூர் கோட்டார்ச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் பாலாஜி மற்றும் நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் அரியலூர் நகரில் வரும் நாளை முதல் ஞாயிற்று கிழமை முடிய 7 நாட்கள் முழு ஊரடங்கு செய்ய வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் பால் கடைகள், மருந்தகங்கள் ஆகியவை மட்டும் திறக்கப்படும் என்றும், மற்ற அனைத்து நாட்களும் அடைக்கப்படும் என்றும் முடிவெடுத்துள்ளனர்