திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை… உதவி ஆட்சியர் விசாரணை!

 

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை… உதவி ஆட்சியர் விசாரணை!

திருவண்ணாமலை

ஆரணியில் திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகன் பாலமுருகன். இவருக்கும், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பரந்தாமன் மகள் உமா சங்கரிக்கும் (26) கடந்த மாதம் 23ஆம் தேதி திருமணம் நடந்தது. பாலமுருகன், சென்னை ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை… உதவி ஆட்சியர் விசாரணை!

நேற்று முன்தினம் காலை பாலமுருகன் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த உமா சங்கரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்காததால் மாமியார் ஜெயகாந்தி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது, உமா சங்கரி தூக்கில் சடலமாக தொங்கினார். தகவலின் பேரில் ஆரணி நகர போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து உமா சங்கரியின் தந்தை பரந்தாமன் அளித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து ஆரணி சார் ஆட்சியர் கவிதா விசாரித்து வருகிறார்.