Home உலகம் ரஷ்ய கொரோனா தடுப்பு மருந்து பற்றிய புதிய அப்டேட் செய்தி!

ரஷ்ய கொரோனா தடுப்பு மருந்து பற்றிய புதிய அப்டேட் செய்தி!

கொரோனா தொற்று உலகை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கி விட்டது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 24 லட்சத்து 67 40 ஆயிரத்து 865 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 747 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 965 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,44,74,152 பேர்.

கொரோனா தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என உலகமே ஆவலாகக் காத்திருந்தது. அப்போது, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்து, அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.

ஆனபோதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் V பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.

பல கட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பு மருந்து 92 சதவிகிதம் அளவுக்கு பலனித்து, கொரோனாவிலிருந்து காக்கும் என ரஷ்ய நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதப் பலன் அளிக்கிறது எனும் தகவல் வெளியானது.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...
Do NOT follow this link or you will be banned from the site!