இந்த நாட்டிலும் புதிய வகை கொரோனா – விமானத்திற்கு தடை

 

இந்த நாட்டிலும் புதிய வகை கொரோனா – விமானத்திற்கு தடை

உலகின் பல நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டனில் இதன் தொடக்கம் அமைந்தது. அந்த நாட்டில் அதிவேகமாக புதிய வகை கொரோனா பரவியது.

இந்த நாட்டிலும் புதிய வகை கொரோனா – விமானத்திற்கு தடை

அடுத்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களுக்கு இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், ஆஸ்திரேலியா முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

ஐநாவின் உலக சுகாதார மையத்தின் மூத்த விஞ்ஞானி செளம்யா சாமிநாதன் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குச் சென்றிருக்க வாய்ப்பு அதிகம். அதனால், அனைத்து நாடுகளின் அரசுகளும் தொடக்கத்திலேயே பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நாட்டிலும் புதிய வகை கொரோனா – விமானத்திற்கு தடை

இந்நிலையில் தென்னாப்பிரிக்க நாட்டிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதன் அண்டை நாடுகள் கடும் அச்சத்தில் இருக்கின்றன. மேலும், தென்னாப்பிரிக்காவோடு பல நாடுகள் விமானம் மற்றும் அனைத்து வகை போக்குவரத்தையும் நிறுத்தி விட்டன.