தியேட்டர் திறப்பது உறுதி ; ஆனால் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாதாம்.!?

 

தியேட்டர் திறப்பது உறுதி ; ஆனால் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாதாம்.!?

தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பழைய வெற்றித் திரைப்படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மாதமே தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தமிழக அரசு அனுமதிக்காமல் இருந்தது. இதை தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்ததன் பேரில், வரும் 10ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

தியேட்டர் திறப்பது உறுதி ; ஆனால் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாதாம்.!?

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தியேட்டர்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தியேட்டர்களை திறந்தாலும் பழைய வெற்றித் திரைப்படங்களையே திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தியேட்டர் திறப்பது உறுதி ; ஆனால் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாதாம்.!?

VPF கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்னை நிலவுவதால் தற்போது புதிய படங்களை திரையிட முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, பழைய வெற்றித் திரைப்படங்களையும், பிறமொழி படங்களையும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.