சீனாவில் புதிய வகை பன்றிக் காய்ச்சல் – மனிதர்களை பாதிக்க வாய்ப்பு?

 

சீனாவில் புதிய வகை பன்றிக் காய்ச்சல் – மனிதர்களை பாதிக்க வாய்ப்பு?

பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை பன்றிக் காய்ச்சலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக் காய்ச்சலைக் கண்டுபிடித்துள்ளனர். இது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்டது என அமெரிக்க அறிவியல் இதழான பி.என்.ஏ.எஸ்-இல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பன்றிக் காய்ச்சல் 2009-ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய எச்1என்1 மரபணுவில் இருந்து வந்துள்ளது.

சீனாவில் புதிய வகை பன்றிக் காய்ச்சல் – மனிதர்களை பாதிக்க வாய்ப்பு?

மனிதர்களைப் பாதிப்பதற்கு உண்டான அனைத்து முக்கிய அடையாளங்களையும் இந்த பன்றிக் காய்ச்சல் கொண்டிருப்பதாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. மேலும் எந்தவொரு நோய் எதிர்ப்பு சக்தியாலும் இந்தக் காய்ச்சலை தடுக்க முடியாது என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பன்றிகளிடம் இருந்து சிலருக்கு இந்த தொற்றுநோய் பரவி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு இந்தக் காய்ச்சல் பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.