புதிய அரசியல் கட்சி: நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

 

புதிய அரசியல் கட்சி: நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதிய அரசியல் கட்சி: நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவுள்ள அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக ரஜினிகாந்த் தனது கட்சியை பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி: நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட நிர்வாகிகளுடன் அர்ஜுன மூர்த்தி தமிழருவி மணியன் ஆலோசித்த நிலையில் ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். ரஜினிகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

புதிய அரசியல் கட்சி: நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

முன்னதாக நேற்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் இருவருடனும் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி கொடி மற்றும் சின்னம் வடிவமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.