காவிரி ஆற்றின் மாசுபாட்டை தவிர்க்க ரூ.10,700 கோடியில் புதிய திட்டம் : முதல்வர் பழனிசாமி தகவல்!

 

காவிரி ஆற்றின் மாசுபாட்டை தவிர்க்க ரூ.10,700 கோடியில் புதிய திட்டம் : முதல்வர் பழனிசாமி தகவல்!

நதிகள் இணைப்பு, குடிநீர் திட்டங்கள் தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் நேற்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். காணொளி வாயிலாக நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் நீர்வள திட்டம் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி எடுத்துரைத்தார்.

காவிரி ஆற்றின் மாசுபாட்டை தவிர்க்க ரூ.10,700 கோடியில் புதிய திட்டம் : முதல்வர் பழனிசாமி தகவல்!

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘பருவமழையை நம்பி இருக்கும் தமிழகத்தில் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் காவிரி நீர் இன்றி அமையாதது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே ரூ.1,434 கோடி செலவில் குடிநீர் பாதுகாப்பு திட்டத்துக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியை காக்க “நடந்தாய் வாழி காவேரி” திட்டத்தை செயல்படுத்த அனுமதி தர வேண்டும்’ என்று கூறினார்.

தொடர்ந்து, ‘காவிரி மாசுவடுவதை தடுக்கும் வகையில் ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியை தூய்மை படுத்தும் இந்த திட்டத்தின் விரிவான அறிக்கையை ‘வாப்கோஸ்’ நிறுவனம் தாயரித்து வருகிறது. எனவே இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். மேலும், ‘நதிகளை சுத்தப்படுத்தும் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டத்தை போலவே, இந்த சிறப்பான திட்டத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இதனை தேசிய திட்டமாக செயல்படுத்தலாம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.