ஆசிரியர் திறனுக்காக புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு !

 

ஆசிரியர் திறனுக்காக புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு !

ஆசிரியர்களுக்காக பாடத்திட்ட கட்டமைப்பு விரைவில் வகுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் திறனுக்காக புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு !

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை வரைவை கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. அதில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ஆசிரியர் திறனுக்காக புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு !

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். ஏற்கனவே மாணவர்களுக்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு கொண்டுவரப்படவுள்ளது கவனிக்கத்தக்கது.