“யார் போனையும் வேவு பார்க்கவில்லை” என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

 

“யார் போனையும் வேவு பார்க்கவில்லை” என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் இயலாமை வெட்டவெளிச்சமாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது.

“யார் போனையும் வேவு பார்க்கவில்லை” என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

இந்த பெகாசஸ் எந்த போனிலும் ஊடுருவி அனைத்தையும் பக்காவாக ஆட்டையைப் போடுவதில் கில்லி. இதனை உருவாக்கியது இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம். இந்நிறுவனத்தில் பல்வேறு உலக நாடுகளின் அரசுகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதாவது இந்த ஸ்பைவேரை பெற்றுக்கொண்டு அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் வேவு பார்க்க பயன்படுத்தலாம். இது டிஜிட்டல் பாதுகாப்பு கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடியது. இதன்மூலம் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக The Wire செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“யார் போனையும் வேவு பார்க்கவில்லை” என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

மத்திய அரசின் தயவு இல்லாமல் இந்த ஹேக்கிங் அரங்கேறியிருக்காது என்பதால், இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். குறிப்பாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளித்த புதிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், “சட்ட விரோதமாக ஒருவரின் போனை கண்காணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியமற்ற ஒன்று.

“யார் போனையும் வேவு பார்க்கவில்லை” என்று சொன்ன அமைச்சரின் செல்போனையே ஹேக் செய்ததாக தகவல்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் (நேற்று) இந்தச் செய்தி வெளியாகியிருப்பது தற்செயலானது அல்ல என்று நான் நினைக்கிறேன். குறிப்பிட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் துளியும் உண்மையும் இல்லை. யாருடைய போனும் ஹேக் செய்யப்படவில்லை” என்றார். அவர் விளக்கமளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே The Wire இதழ் ஹேக்கிங் செய்யப்பட்ட அடுத்த பட்டியலை வெளியிட்டது. அதில் விளக்கமளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வின் பெயரும் இருந்தது தான் இங்கே ஹைலைட்டான விஷயம். இதற்கு அமைச்சர் என்ன விளக்கமளிக்க போகிறார்?