”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

 

”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில், ”இன்” என்ற வரிசையில் புத்தம் புதிய 2 போன்களை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் சாம்சங் நிறுவனத்திற்கே சிம்ம சொப்பனமாக இருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பின்னர் பல சீன நிறுவனங்களின் வருகையால் சற்றே பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக, இன்போன்கள் மூலம் புதிய உத்வேகத்துடன் மைக்ரோமேக்ஸ் களமிறங்கி உள்ளது. இதன் முலம் சந்தை பங்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ள மைக்ரோமேக்ஸ், சரியாக பண்டிகை காலத்தில் இந்த போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

இன் வரிசையில் நோட் 1 மற்றும் 1பி என மொத்தம் 2 போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. இரண்டு போன்களுமே மீடியா டெக் சிப்செட்டுகள் பொருத்தப்பட்டு, ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் நோட் 1 போன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் திரை, ஹோல் பஞ்ச் டிசைன், மீடியா டெக் ஹீலியோ ஜி85 பிராசசர், 4 ஜிபி ரேமுடன் வருகிறது. கேமராவை பொறுத்தவரை, பின்புறம் 48 மெகா பிக்சல் பிரதான கேமராவும், 5 எம்பி வைட் ஆங்கிள் கேமராவும், மேக்ரோ மற்றும் டெப்த் சென்சிங் செய்வதற்கு என தனித்தனியாக இரண்டு கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. முன்புறத்தில் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த செல்பி கேமராவில், வழக்கமான வீடியோ மற்றும் போட்டோக்கள் மட்டுமின்றி ஜிஃப் எனப்படும் இமேஜ்களை எடுக்க முடியும்.

”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

மேலும், இரண்டு சிம் கார்டு இணைக்கும் வசதி, 4 ஜிபி ரேம் -64 ஜிபி மெமரி மற்றும் 128 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் வெளிவருகிறது. இதில் 64 ஜிபி மெமரி, 10,999 ரூபாய்க்கும், 128 ஜிபி மெமரி கொண்ட போன் 12,499 ரூபாய்க்கும் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இதேப்போல மற்றொரு அறிமுகமான 1பி ஸ்மார்ட்போன், 2ஜிபி – 32 ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம் – 64ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் வெளியாகி உள்ளது. இவற்றின் விலை முறையே 6,999 ரூபாய் மற்றும் 7,999 ரூபாய் ஆகும். இந்த இன் போன்கள் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் இரண்டு சிம் கார்டு வசதி, 6.52 இன்ச் எச்டி பிளஸ் திரை, ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராசசரூடன் வந்துள்ளது.

”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் எல்இடி பிளாஷ் உடன் 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் என இரண்டு கேமராக்களும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமாவும் உள்ளது. இதைத்தவிர 4ஜி வோல்டி, புளூடூத், வைபை, யுஎஸ்பி டைப்சி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரியும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. இந்த போனுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்கிறது.

”நான்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” ” புதிய ”இன்” போன்கள்- மைக்ரோமேக்ஸ் அறிமுகம்!

பட்ஜெட் விலையில் இத்தனை சிறப்பம்சங்களுடன் போன்களை அறிமுகப்படுத்தி உள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம், இந்த இரண்டு போன்களிலும் எந்தவித புளோட்வேர்களோ அல்லது விளம்பரங்களோ இருக்காது என்று அறிவித்துள்ளது. ஆக ஸ்டாக் ஆண்டிராய்ட் அனுபவத்தை பட்ஜெட் விலையில் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள மைக்ரோமேக்ஸ், இவற்றிற்கு 2 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்