மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!

 

மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!

அமெரிக்காவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய கேண்டிடா ஆரிஸ் என்ற புதிய தொற்று கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மரணத்தின் விளிம்பில் கொண்டு சென்றுவிட்டது. மரணங்கள் நிகழுவதை எந்த நாடுகளாலும் தவிர்க்க முடியவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து ஆயிரக் கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும் அதை செலுத்தி முடிப்பதற்குள் எத்தனை மரணங்கள் நிகழுமோ என்ற அச்சம் நீட்டிக்கிறது. வைரஸ் உருமாற்றம் போதாதென்று கருப்பு பூஞ்சை உள்ளிட்ட தொற்று பாதிப்புகளும் மக்களை பீதியடையச் செய்கின்றன.

மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!

இந்தியாவில் கண்டறியப்பட்ட கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால் காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையே இந்த பூஞ்சை குறிவைத்து தாக்கியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது.

மரணத்தை சந்திக்க வைக்கும் ‘புதிய பூஞ்சை தொற்று ரெடி’… பீதியை கிளப்பும் அமெரிக்கா!
a

இந்த நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சியில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கேண்டிடா ஆரிஸ் என்கிற புதிய பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேரடியாக ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை விளைவிக்கக்கூடிய இந்த பூஞ்சை தொற்றால் வாஷிங்டன் டி.சியில் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டல்லாஸ் மாகாணத்தில் 22 பேருக்கு இந்த பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது. இந்த பூஞ்சை தொற்று குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நியூயார்க்கில் 3 பேர் உரிய சிகிச்சை பெற்று இந்த பூஞ்சை பாதிப்பில் மீண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.