புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது .

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை காலை 7 மணிக்கு ஆரம்பான மழை கொட்டி தீர்த்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில்மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 23 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.