ஜிஎஸ்டி இழப்பீடு ஈடு செய்ய கடன் – 13 மாநிலங்கள் ஏற்பு

ஜிஎஸ்டி இழப்பீடு ஈடு செய்ய கடன் – 13 மாநிலங்கள் ஏற்பு

புதுடெல்லி

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என்கிற வசதியை 13 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மாநிலங்கள் இந்த முடிவினை ஏற்றுக் கொண்டுள்ளன.

ஜிஎஸ்டி இழப்பீடு ஈடு செய்ய கடன் – 13 மாநிலங்கள் ஏற்பு

பீகார். ஒடிசா, ஆந்திரா, குஜராத், உத்தரகாண்ட், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து. மிசோரம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் ஓரிரு நாட்களில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு ஈடு செய்ய கடன் – 13 மாநிலங்கள் ஏற்பு

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ. 2.35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.97 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது,. இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியிடமிடருந்து கடன் வாங்கிக்

ஜிஎஸ்டி இழப்பீடு ஈடு செய்ய கடன் – 13 மாநிலங்கள் ஏற்பு

கொள்ளலாம் என சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதை பல மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக கூட்டணியில் ஆளும் மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரவேண்டியது குறிப்பிடத்தக்கது.