புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் பேக்குகள்- ஜியோ அறிமுகம்-ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

 

புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் பேக்குகள்- ஜியோ அறிமுகம்-ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், ஜியோ கிரிக்கெட் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கிரிக்கெட் பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 மதிப்புள்ள ஒரு ஆண்டுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவையும் இலவசமாக ஜியோ வழங்குகிறது.

புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் பேக்குகள்- ஜியோ அறிமுகம்-ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

அதன்படி ரூ.401 கட்டண திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 3 ஜிபி டேட்டாவும், ரூ. 598 திட்டத்தில், 56 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் பெறலாம் என தெரிகிறது.

மேலும், 777 ரூபாய் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் பெறலாம் என்றும் 2 ஆயிரத்து 599 ரூபாய் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து பேக்குகளிலும் அளவற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி உண்டு என்றும் அனைத்து பேக்குகளுக்கும் ஒரு வருட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா இலவசம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் பேக்குகள்- ஜியோ அறிமுகம்-ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

இதைத்தவிர ஏற்கனவே வேறு ரீசார்ஜ் செய்தவர்களுக்காக 499 ரூபாய்க்கு ஒரு ஆட் ஆன் திட்டத்தையும் ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா பெறலாம் என்றும் இத்திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த பேக்கிற்கும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரு ஆண்டு சந்தா இலவசம் என ஜியோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பேக்குகளில் கிடைக்கும் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மூலமாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிகிறது.

புதிய கிரிக்கெட் ரீசார்ஜ் பேக்குகள்- ஜியோ அறிமுகம்-ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்

-எஸ். முத்துக்குமார்