பேராபத்தை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வகை கொரோனா : 29 நாடுகளில் கண்டுபிடிப்பு!

பேராபத்தை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வகை கொரோனா : 29 நாடுகளில்  கண்டுபிடிப்பு!

உலக சுகாதார அமைப்பு லாம்ப்டா என்ற உருமாறிய கொரோனா வகை 29 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா இந்த வைரஸ் உருவாகியுள்ளதாக தெரிகிறது. பெருவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, லாம்ப்டா அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. பெருவில் லாம்ப்டா பரவலாக உள்ளது, அங்கு ஏப்ரல் 2021 முதல் கொரோனா நோயாளிகள் 81 சதவீதம் இந்த மாறுபாட்டுடன் உள்ளதாகவும் தெரிகிறது.

பேராபத்தை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வகை கொரோனா : 29 நாடுகளில்  கண்டுபிடிப்பு!

சிலி நாட்டில் கடந்த 60 நாட்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இதற்கான அறிகுறி 32 சதவிகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டது, பிரேசில் , அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் போன்ற பிற நாடுகளிலும் கொரோனா பரவலின் புதிய மாறுபாட்டு அதிகரிக்க தொடங்கியுள்ளன. இருப்பினும் இதற்கான சாத்தியக்கூறுகள் சற்று குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஜெனீவா அமைப்பு ஒன்று, லாம்ப்டா மாறுபாட்டை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளது.

பேராபத்தை ஏற்படுத்தும் உருமாறிய புதிய வகை கொரோனா : 29 நாடுகளில்  கண்டுபிடிப்பு!

இதனிடையே எளிதில் பரவக்கூடிய டெல்டா வகை வைரசானது உருமாறி ‘டெல்டா பிளஸ்’ அல்லது ‘ஏ.ஒய் 1’ வகையை உருவாக்குவதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.