15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : உஷார் மக்களே!

 

15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : உஷார் மக்களே!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து, தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் மோடி இன்று டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது.

15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : உஷார் மக்களே!

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக பதிவாகிறது என்றும் புதிதாக பதிவாகும் பாதிப்பில் 84% இந்த மாநிலங்களில் இருந்தே பதிவாகிறது என்றும் தெரிவித்திருந்தது. இதனால் மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தது.

15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : உஷார் மக்களே!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும் கொரோனாவுக்கு 106 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 11,288 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருப்பதாகவும் 1,68,627 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.