`சென்னை மக்களே, குறைகளை என்னிடம் சொல்லுங்கள்!’- புதிய போலீஸ் கமிஷனர் சொல்கிறார்

 

`சென்னை மக்களே, குறைகளை என்னிடம் சொல்லுங்கள்!’- புதிய போலீஸ் கமிஷனர் சொல்கிறார்

“பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் நேரிடையாகவே சொல்லலாம். இதற்காக தனி நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள் என்னை வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளலாம்” என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

`சென்னை மக்களே, குறைகளை என்னிடம் சொல்லுங்கள்!’- புதிய போலீஸ் கமிஷனர் சொல்கிறார்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். இன்று தனது பொறுப்புகளை விஸ்வநாதன், மகேஷ் குமார் அகர்வாலிடம் ஒப்படைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமார் அகர்வால், “சென்னை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை பெருநகர காவல்துறையில் 26 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால்மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்ய உள்ளேன்.

கொரோனாவை தடுக்க தமிழக அரசின் அறிவுறுத்தல்படி முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மற்றும் அவசியமில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். காவல்துறையினர் சேவை செய்ய பொதுமக்கள், ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்றை தடுப்பதற்கு முக்கிய வழி என்னவென்றால் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. காவல்துறையினர் கண்டிப்பாக முகக்கவசம் போட்டுக் கொள்வதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் காவலர்களுக்கு அறிவுரை கூற வேண்டியுள்ளது.

`சென்னை மக்களே, குறைகளை என்னிடம் சொல்லுங்கள்!’- புதிய போலீஸ் கமிஷனர் சொல்கிறார்

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் காவலர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அவர்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் நேரிடையாகவே சொல்லலாம். இதற்காக தனி நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள் என்னை வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் காவலர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மனஉளைச்சலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் பயிற்சி கொடுக்க போகிறோம். பயிற்சி முடித்த காவலர்கள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.