பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை – யுடியூப் முடிவு!

 

பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை – யுடியூப் முடிவு!

கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவையான யுடியூப் சேவையை தற்போது பலரும் தாறுமாறாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால், ஒரு வீடியோ பதிவேற்றி யுயூப் சேனல் தொடங்கி விடுகின்றனர். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை இல்லாமல் இருக்கிறது. இப்படி ஆளாளுக்கு யுடியூப் சேனல் தொடங்கினாலும், சிலர் அடுத்தவர்களை தொந்தரவு செய்யும் வகையிலும், சமூக விரோத கருத்துகளை பரப்பும் வகையிலும் யுடியூப் தொடங்குவது கூகுளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை – யுடியூப் முடிவு!

அதனால், தற்போது யுடியூப் சேனல்களில் கருத்துகளை பதிவு செய்வதற்கு முன் எச்சரிக்கை வாசகங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி யுடியூபில் பதிவிடும் போது, இந்த உள்ளடக்கத்தில் தகாத வார்த்தைகள், கருத்துகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். தகாத வார்த்தைகள் பயன்படுத்தும் பொழுது, அதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த வசதி இருக்கும். போஸ்ட்டை பதிவு செய்வதற்கு முன்னர், இதற்கு தனி பாப்-அப் சமிக்கை வரும். அதில், இந்த போஸ்டில் தகாத வார்த்தைகள் இல்லை என்பதை உறுதி செய்யவும் என்கிற ஆப்ஷன் இருக்கும்.

பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை – யுடியூப் முடிவு!

அதை உறுதி செய்வதன் மூலம், பயனர் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் பதிவு செய்வதை தடுப்பதற்கு இந்த வசதியை கொண்டு வர உள்ளது. அதன் பின்னர், அந்த பதிவுகளில் தகாக வார்த்தைகள், அடுத்தவர்களின் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் குறித்து புகார் வரும்பட்சத்தில் அந்த பயனர்களின் கணக்குகளை முடக்கவும் யுடியூப் திட்டமிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் ஆளாளுக்கு யுடியூப் தொடங்கி அடுத்தவர்களை இணைய வழி தாக்குவதை தடுக்க முடியும் என யுடியூப் தெரிவித்துள்ளது.