‘ஊரடங்கு விதிமீறல்’..கடுமையாகும் தண்டனை; புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு!

 

‘ஊரடங்கு விதிமீறல்’..கடுமையாகும் தண்டனை; புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வகை நோய்த்தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள, வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல், மக்கள் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிகின்றனர். நோயின் தீவிரம் புரியாமல் இது போன்ற செயலில் ஈடுபடும் சிலரால், மக்கள் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. இதுவரை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதித்தும் மக்கள் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிகின்றனர்.

‘ஊரடங்கு விதிமீறல்’..கடுமையாகும் தண்டனை; புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு!

இந்த நிலையில், கொரோனா விதிகளை மீறுவோருக்கு தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் இயற்ற அரசு முடிவெடுத்துள்ளது. புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை ஏற்கனவே ஆலோசனை நடத்தியது. அதன் படி, புதிய சட்டத்தின் விதிகள் அடங்கிய கோப்புகளை சட்டத்துறையிடம் சுகாதாரத்துறை ஒப்படைக்க உள்ளது. இப்புதிய சட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.