கொரோனா விதிமீறல்; அபராதம் விதிக்க வருகிறது புதிய சட்டத்திருத்தம்!

 

கொரோனா விதிமீறல்; அபராதம் விதிக்க வருகிறது புதிய சட்டத்திருத்தம்!

கொரோனா விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டத்திருத்தம் வர உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு தளர்வுகளை அளித்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் முறையாக பின்பற்றாததால் பாதிப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா விதிமீறல்; அபராதம் விதிக்க வருகிறது புதிய சட்டத்திருத்தம்!

இதனிடையே 5 மாதத்துக்கும் மேலாக முடங்கி வீடுகளில் முடங்கி இருந்த மக்களுக்காக மால்கள், பூங்காக்கள் என அனைத்தையும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. சமீபத்தில், கொரோனா விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையை சட்டத்துறை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

கொரோனா விதிமீறல்; அபராதம் விதிக்க வருகிறது புதிய சட்டத்திருத்தம்!

இந்த நிலையில் கொரோனா விதியை மீறுபவர்களுக்காக புதிய சட்டத்திருத்தம் வர உள்ளதை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தனி நபர் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டத்திருத்தம் வர உள்ளதாக கூறியுள்ளார்.