“ஒருபோதும் ராகுல் டிராவிட்டை காப்பியடிக்க முயற்சித்ததில்லை!” – புஜாரா ஓபன் டாக்

 

“ஒருபோதும் ராகுல் டிராவிட்டை காப்பியடிக்க முயற்சித்ததில்லை!” – புஜாரா ஓபன் டாக்

மும்பை: ஒருபோதும் ராகுல் டிராவிட்டை காப்பியடிக்க முயற்சித்ததில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த கால வெற்றிகளில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது என்பதை எந்த கிரிக்கெட் ரசிகரும் ஒத்துக் கொள்வார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் பேட்டிங் மிகவும் அட்டகாசமாக இருக்கும். பல போட்டிகளில் இந்திய அணியின் தோல்வியை டிராவிட் தடுத்து நிறுத்தியுள்ளார். அதனால் தான் அவரை ரசிகர்கள் இந்தியாவின் ‘தடுப்புச்சுவர்’ என்று புகழ்ந்தார்கள். இன்றைய சூழலில் இந்திய அணியின் ராகுல் டிராவிட்டாக பார்க்கப்படுபவர் புஜாரா தான். அண்மையில் இ.எஸ்.பி.என் ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்தார்.

“ஒருபோதும் ராகுல் டிராவிட்டை காப்பியடிக்க முயற்சித்ததில்லை!” – புஜாரா ஓபன் டாக்

அப்போது அவர் பேசுகையில், “ராகுல் டிராவிட் என்னுடைய வாழ்க்கையில் ஒரு உத்வேகத்திற்கு காரணமாக இருந்தார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், அவரை போல விளையாட வேண்டும் என ஒருபோதும் காப்பியடிக்க முயற்சித்ததில்லை. எங்கள் இருவரின் பேட்டிங்கில் ஒற்றுமை உள்ளது. சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய அனுபவங்களின் மூலம் அது வந்தது. சதமடிப்பது முக்கியமல்ல. நம்முடைய அணியை நாம் சுமக்க வேண்டும் என டிராவிட் என்னிடம் கூறினார்.  அப்படித்தான் நான் பொறுப்பான பேட்டிங்கை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்” என்றார்.