நெட்டிசன்கள் இம்சை… பிரதமர், பா.ஜ.க யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்ய தடை!

 

நெட்டிசன்கள் இம்சை… பிரதமர், பா.ஜ.க யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்ய தடை!

நெட்டிசன்கள் தொடர்ந்து எதிர்க் கருத்து பதிவிட்டு வந்ததால் பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் பா.ஜ.க அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்வதற்கான வாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதற்குப் பிறகு அது அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ஒரு கோடிக்கும் அதிகமானோர் டிஸ் லைக் செய்தனர். மேலும் நீட், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கமெண்ட் பகுதியில் எழுப்பினர். டிஸ் லைக் அதிக அளவில் குவிந்ததால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க, லைக்கை அதிகரித்து, டிஸ்லைக்கை குறைக்கும் முயற்சியில் இறங்கியது.

நெட்டிசன்கள் இம்சை… பிரதமர், பா.ஜ.க யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்ய தடை!


இங்கு அடித்தால் பா.ஜ.க-வுக்கு வலிக்கிறது என்று புரிந்துகொண்ட எதிர்க்கட்சி ஆதரவு நெட்டிசன்கள் பா.ஜ.க, பிரதமர் மோடியின் யூடியூப் பக்கங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
வருகிற 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதை தேசிய வேலைவாய்ப்பின்மை நாளாக கொண்டாட விரும்புகிறேன். நீங்களும் இதில் இணைய விரும்புகின்றீர்களா என்று எல்லாம் பிரதமர் மோடியைக் கேட்டுக் கலாய்த்தனர். பலவற்றை நீக்கியும், ரிப்போர்ட் செய்தும் பார்த்த பா.ஜ.க ஐ.டி-விங்குக்கு தொடர்ந்து ஆயிரக் கணக்கில் கமெண்ட் வருவது அதிர்ச்சியைத் தந்தது.

நெட்டிசன்கள் இம்சை… பிரதமர், பா.ஜ.க யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்ய தடை!


இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம், நரேந்திர மோடி, பா.ஜ.க அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் கமெண்ட் செய்யும் வாய்ப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. வருகிற 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி அவரது ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பக்கத்தில் அதிரடியாக கமெண்ட், டிஸ்லைக், ரிப்போர்ட் பதிவிட எதிர்ப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பா.ஜ.க ஐ.டி விங் திணறிப்போய் உள்ளது.