இந்திய எதிர்ப்பு உரைகளை ஒலிபரப்பும் நேபாள எப்.எம். ரேடியோக்கள்… நேபாளத்தின் புதிய மேப்புக்கு சொம்பு தூக்கும் ரேடியோக்கள்

இந்திய எதிர்ப்பு உரைகளை ஒலிபரப்பும் நேபாள எப்.எம். ரேடியோக்கள்… நேபாளத்தின் புதிய மேப்புக்கு சொம்பு தூக்கும் ரேடியோக்கள்

நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் கே.பி. ஒளி தலைமையிலான நேபாளம் கம்யூனிஸ்ட் அரசு, இந்திய பகுதிகளான லிபுகேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவின் மூலோபாய முக்கிய பகுதிகளை அவர்களது எல்லை பகுதியாக உள்ளடக்கி புதிய வரைபடைத்தை உருவாக்கி இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. தற்போது அந்நாட்டு எப்.எம். ரேடியோக்கள் வாயிலாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நேபாள அரசு இறங்கியுள்ளது.

இந்திய எதிர்ப்பு உரைகளை ஒலிபரப்பும் நேபாள எப்.எம். ரேடியோக்கள்… நேபாளத்தின் புதிய மேப்புக்கு சொம்பு தூக்கும் ரேடியோக்கள்

இந்திய எல்லையை ஒட்டியுள்ள நேபாள எப்.எம். ரேடியோக்கள் தற்போது இந்தியாவுக்கு எதிரான உரைகளை தொடர்ந்து ஒலிபரப்பி வருகின்றன. மேலும் நேபாள அரசின் புதிய வரைபடத்துக்கு ஆதரவாக, லிபுகேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளின் வானிலை அறிக்கைகளை அந்நாட்டு எப்.எம். ரேடியோக்கள் அறிவிக்க தொடங்கி உள்ளன. இந்திய பகுதிகளை சொந்தம் கொண்டாடும் நேபாள அரசின் கோரிக்கையை எப்.எம். ரேடியோக்கள் ஊக்குவித்து வருகின்றன என இந்திய எல்லை பகுதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இந்திய எதிர்ப்பு உரைகளை ஒலிபரப்பும் நேபாள எப்.எம். ரேடியோக்கள்… நேபாளத்தின் புதிய மேப்புக்கு சொம்பு தூக்கும் ரேடியோக்கள்

இது தொடர்பாக பித்தோராகரின் தர்ச்சுலா துணைப்பிரிவில் உள்ள டந்து கிராமத்தை சேர்ந்த ஷாலு தத்தால் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சில நேபாள எப்.எம். சேனல்கள் நேபாள பாடல்களுக்கு மத்தியில் இந்திய விரோத உரைகளை ஒலிபரப்ப தொடங்கியுள்ளன. எல்லையின் இருபுறமும் உள்ள மக்கள் நேபாளி பாடல்களை கேட்பதால், நேபாள தலைவர்கள் அவர்களுக்கு இடையே நிகழ்த்திய இந்தியாவுக்கு எதிரான பேச்சுகளையும் அவர்கள் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.