நெல்லை: கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

 

நெல்லை: கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

நெல்லை மாவட்டத்தில் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தென் மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தும் வழங்கியும், புதிய திட்டங்களை அறிவித்தும் வருகிறார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை: கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் மக்களுக்கு வளர்ச்சித் திட்டப் பணிகள் சென்று சேர விரைவாக பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.

நெல்லை: கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, எம்.எல்.ஏ-க்கள், பொதுப் பணித் துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை முதன்மை செயலாளர் கோபால், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா பிரபாகர், தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.