தேதியை மாற்றமுடியாது… திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்: தேசிய தேர்வு முகமை

தேதியை மாற்றமுடியாது… திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்: தேசிய தேர்வு முகமை

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதோடு, சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

தேதியை மாற்றமுடியாது… திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தவும், ஜெஇஇ தேர்வுகளை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் தேர்வு தேதியை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளது.