நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள்: சான்றிதழை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு!

 

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள்: சான்றிதழை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு!

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்களின் சான்றிதழை கொடுக்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்து பல மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது அம்பலமானது. முதன் முதலாக கைது செய்யப்பட்ட உதித் சூர்யா என்ற மாணவரின் மூலமாக, மோசடி செய்து கல்லூரிகளில் சேர்ந்த பல மாணவர்களை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த மாணவர்களுடன் சேர்த்து அவர்களது தந்தைகளையும் கைது செய்ததோடு, முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் கைது செய்தனர்.

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள்: சான்றிதழை கொடுக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பல மாணவர்களின் மருத்துவப் படிப்பை கனவாக்கும், இத்தகைய முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த சான்றிதழ்களை திருப்பி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். 2 மாணவர்களின் 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ்களை மட்டும் கொடுக்க அனுமதி அளித்த நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளனர்.