“நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை; தவறான தகவலை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!

“நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை; தவறான தகவலை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக, விடைகள் மாற்றப்பட்டு பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். விடைத்தாள் அதாவது ஓஎம்ஆர் நகல்கள் பதிவேற்றம் செய்த பின் விடைக்குறிப்பை வைத்து சரிபார்த்ததில் நிறைய மதிப்பெண்கள் கிடைத்ததாகவும், தற்போது அந்த விடைத்தாள் நகல் மாற்றப்பட்டு பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

“நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை; தவறான தகவலை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!

இந்நிலையில் நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டு மாறியதாக தகவல் வெளியான நிலையில் தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.