நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

செப்.13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது நீட் தேர்வு. இந்த தேர்வு சிபிஎஸ்இ கல்வி வழியில் நடைபெறுவதால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இதனை எதிர்கொள்ள சிரமப்படுவதால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

ஆனால், எந்த காரணத்தை கொண்டும் தேர்வுகள் நடத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்த மத்திய அரசு கடந்த செப்.13 ஆம் தேதி தேர்வை நடத்தி முடித்தது. அதற்கு முன்தினம் தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா அச்சுறுத்தலால் தேர்வெழுத தவறிய மாணவர்களுக்காக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!

இந்த நிலையில், செப்.13ல் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான விடைகள் வெளியாகியுள்ளன. தேர்வில் கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.