“குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : வன்னி அரசு

“குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : வன்னி அரசு

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

“குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : வன்னி அரசு

இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த செப்.13ம் தேதி நடந்தது. இதில் சுமார் 14.37 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதே சமயம் கொரோனாவால் தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்காக கடந்த 14ம் தேதி மறுதேர்வும் நடத்தப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

“குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : வன்னி அரசு

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு, “குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வு எழுதிய எண்ணிக்கையில் குளறுபடி இருக்கும்போது மதிப்பெண்களில் முறைகேடு நடக்காமல் இருக்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“குளறுபடி நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” : வன்னி அரசு

முன்னதாக நீட் தேர்வு முடிவில், திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேரில் 1738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% ஆக உள்ளதாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37, 301 எனவும் அறிவிப்பு வெளியாகியது. உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை மாநில தேர்ச்சி விகிதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.