இந்தியாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்காக தனி அணி ஏற்படுத்திய முதல் கட்சி தேசியவாத காங்கிரஸ்

 

இந்தியாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்காக தனி அணி ஏற்படுத்திய முதல் கட்சி தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ் தனது கட்சியில் ஒரின சேர்க்கையாளர்கள் உள்பட எல்.ஜி.பி.டி. சமூகத்தினருக்காக தனி பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது. இதனையடுத்து நம் நாட்டில் அந்த பிரிவினருக்காக கட்சியில் தனி அணி தொடங்கிய முதல் கட்சி என்ற பெருமையை தேசியவாத காங்கிரஸ் பெற்றுள்ளது.

பொதுவாக ஒரு கட்சியில், மாணவரணி, இளைஞரணி, மீனவரணி என பல்வேறு பிரிவுகள் இருக்கும். ஆனால் இதுவரை எல்.ஜி.பி.டி. அதாவது லெஸ்பியன், ஒரின சேர்க்கையாளர்கள், இருபால் மற்றும் திருநங்கைகள் சமூகத்தினருக்காக எந்தவொரு பிரிவோ அல்லது அணியோ இதுவரை எந்தவொரு கட்சியிலும் இல்லை தற்போது எல்.ஜி.பி.டி. சமுதாயத்தினருக்காக கட்சியில் தனி பிரிவை தேசியவாத காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்காக தனி அணி ஏற்படுத்திய முதல் கட்சி தேசியவாத காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ்

மும்பையில் எல்.ஜி.பி.டி. பிரிவை தேசியவாத காங்கிரஸ் கட்சி நேற்று அறிமுகம் செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே ஆகியோர் எல்.ஜி.பி.டி. அணியை அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுப்ரியா சுலே பேசுகையில் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ ஒரு முற்போக்கான கட்சி மற்றும் சமூகத்தை பொறுத்தவரை, எல்.ஜி.பி.டி. சமூகத்திற்கு சமஉரிமைகள் தேவை என்று நான் உணர்ந்தேன். எனவே நாங்கள் அவர்களுக்காக ஒரு தனி பிரிவை உருவாக்கினோம் என தெரிவித்தார்.

இந்தியாவில் ஒரின சேர்க்கையாளர்களுக்காக தனி அணி ஏற்படுத்திய முதல் கட்சி தேசியவாத காங்கிரஸ்
சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், எல்.ஜி.பி.டி. சமூகம் பல்வேறு பல கல்வி மற்றும் சுகாதாரா பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தேசியவாத காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி, அவர்களை பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சிகளை தொடருவோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்று நாம் ஒரு படி முன்னேறியுள்ளோம் என தெரிவித்தார்.