மத்திய அமைச்சர்கள் சொன்னது உண்மையா? மோடி ஜி விளக்கம் கொடுங்க… தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

 

மத்திய அமைச்சர்கள் சொன்னது உண்மையா? மோடி ஜி விளக்கம் கொடுங்க… தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்த மத்திய அமைச்சர்களின் கருத்து உண்மைதானா என்பதை பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் ராவ்சாகேப் டான்வே, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் விவசாயிகளின் போராட்டமல்ல. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த போராட்டத்தின் பின்னால் உள்ளன என்று தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் கடந்த தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகளின் போராட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதால் இனி விவசாயிகளின் எதிர்ப்பு, விவசாயிகளின் போராட்டமாக இருக்காது என்று தெரிவித்து இருந்தார்.

மத்திய அமைச்சர்கள் சொன்னது உண்மையா? மோடி ஜி விளக்கம் கொடுங்க… தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
பிரதமர் மோடி

மத்திய அமைச்சர்களின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கொந்தளித்தனர். இந்நிலையில் அமைச்சர்களின் கருத்து குறித்து பிரதமர் மோடி தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரசின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை அனுதாபத்துடன் பரிசீலிப்பதற்கு பதிலாக, இரு பா.ஜ.க. தலைவர்களும் போராட்டத்தை இழிவுப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் சொன்னது உண்மையா? மோடி ஜி விளக்கம் கொடுங்க… தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆதரவு உள்ளது என்று டான்வே-ம், விவசாயிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் ஆதரிப்பதாகவும் பியூஸ் கோயலும் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர்களின் இந்த கூற்றுகள் உண்மையா என்பதை பிரதமர் நரேந்திர மோடி தெளிவுப்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறமுடியாது என்று உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.