சிவ சேனா இல்லைன்னா பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்து இருக்காது…. பா.ஜ.க.வை சீண்டும் சரத் பவார்

சிவ சேனா இல்லைன்னா பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்து இருக்காது…. பா.ஜ.க.வை சீண்டும் சரத் பவார்

மகாராஷ்டிரா தேர்தல்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி ஒன்றில் கூறியதாவது: கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றது இதற்கு காரணம் சிவ சேனா. சிவ சேனா ஆதரவு இல்லையென்றால் பா.ஜ.க. 3 இலக்கத்தை எட்டி இருக்க முடியாது. நாம் ஆழமாக சென்று பா.ஜ.க. எப்படி முக்கியமான கட்சி ஆனது என்பதை ஆராய வேண்டும்.

சிவ சேனா இல்லைன்னா பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்து இருக்காது…. பா.ஜ.க.வை சீண்டும் சரத் பவார்
பா.ஜ.க.

பிளவு
அவர்களின் 105 எண்ணிக்கைக்கான கிரெடிட் சிவ சேனாவுக்கு செல்ல வேண்டும். கூட்டணியில் சிவ சேனா இல்லையென்றால் பா.ஜ.க. எண்ணிக்கை 40-50ஆக குறைந்து இருக்கலாம். பொருட்டல்ல என சிவ சேனாவை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். எனக்கும் முதல்வருக்கும் (உத்தவ் தாக்கரே) பிளவு என ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை.

சிவ சேனா இல்லைன்னா பா.ஜ.க.வுக்கு 105 இடங்கள் கிடைத்து இருக்காது…. பா.ஜ.க.வை சீண்டும் சரத் பவார்
முதல்வர் உத்தவ் தாக்கரே

லாக்டவுன்
கடந்த 2-3 நாட்களால் ஊடகங்களில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல் என செய்தியை நான் படித்தேன். ஆனால் அதுவும் உண்மையல்ல என தெரிவித்தார். சாமனா பத்திரிகையின் செயல் ஆசிரியர் சஞ்சய் ரவுத்துக்கு அளித்த பேட்டியில், முதல்வர் உத்தவ் தாக்கரேவின் லாக்டவுன் நீட்டிக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஜூலை 3வது வாரம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முழுமையாக குறையும் என சில நிபுணர்கள் தன்னிடம் தெரிவித்ததாக சரத் பவார் தெரிவித்தார்.