லாபத்தை அள்ளி கொடுத்த பொதுத்துறை நிறுவனம்… என்.பி.சி.சி. நிகர லாபம் ரூ.83 கோடி..

லாபத்தை அள்ளி கொடுத்த பொதுத்துறை நிறுவனம்… என்.பி.சி.சி. நிகர லாபம் ரூ.83 கோடி..

என்.பி.சி.சி. 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.83.30 கோடி ஈட்டியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான நவரத்னா நிறுவனமான என்.பி.சி.சி. தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. என்.பி.சி.சி. 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.83.30 கோடி ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.83.77 கோடி ஈட்டியிருந்தது.

லாபத்தை அள்ளி கொடுத்த பொதுத்துறை நிறுவனம்… என்.பி.சி.சி. நிகர லாபம் ரூ.83 கோடி..
என்.பி.சி.சி.

2021 மார்ச் காலாண்டில் என்.பி.சி.சி. நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.2,706.80 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சிறிது அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,651.43 கோடியாக இருந்தது.

லாபத்தை அள்ளி கொடுத்த பொதுத்துறை நிறுவனம்… என்.பி.சி.சி. நிகர லாபம் ரூ.83 கோடி..
என்.பி.சி.சி.

என்.பி.சி.சி. நிறுவனம் கடந்த 2020-21 முழு நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.236.24 கோடியும், மொத்த வருவாயாக ரூ.7,012.35 கோடியும் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது என்.பி.சி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.98 சதவீதம் உயர்ந்து ரூ.54.05ஆக அதிகரித்தது.